கோரிக்கை பதிவு

100 புத்​த​கங்​களை அறி​மு​கம் செய்த 100 மாண​வர்​கள்

கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் சனிக்​கி​ழமை நடந்த நிகழ்ச்​சி​யில்,​ பள்ளி மாணவ மாண​வி​யர் 100 பேர் தங்​க​ளுக்​குப் பிடித்த 100 புத்​த​கங்​களை அறி​மு​கம் செய்​த​னர்.÷மக்​க​ளி​டையே புத்​தங்​க​ளைப் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் வகை​யில் மாதம்​தோ​றும் பல்​வேறு நிகழ்ச்​சி​களை நடத்தி வரு​கி​றது,​ கட​லூர் வாசிப்​போர் இயக்​கம். இ​தன் ஒரு அம்​ச​மாக பள்ளி மாணவ மாண​வி​ய​ரி​டை​யே​யும் ​ புத்​த​கங்​க​ளைப் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் விதத்​தில் 100 புத்​த​கங்​களை மாணவ மாண​வி​யர் அறி​மு​கம் செய்​யும் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்து இருந்​தது. ​÷இந் நிகழ்​ச​சி​யில் கட​லூர் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயி​லும் மாணவ மாண​வி​யர் 100 பேர் பங்​கேற்​ற​னர். ÷அ​வர்​கள் கலை,​ அறி​வி​யல்,​ சமூ​கம்,​ பொரு​ளா​தா​ரம்,​ தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​க​ளில் வெளி​வந்​துள்ள 100 புத்​த​கங்​க​ளைத் தேர்வு செய்து,​ அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னர்.÷இ​தில் 75 மாண​வர்​கள் தமிழ்ப் புத்​த​கங்​க​ளை​யும் 25 மாண​வர்​கள் ஆங்​கி​லப் புத்​த​கங்​க​ளை​யும் தேர்வு செய்து இருந்​த​னர். ​÷நி​கழ்ச்​சிக்கு வாசிப்​போர் இயக்​கத் தலை​வ​ரும் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்ளி முதல்​வ​ரு​மான ஆர்.நட​ரா​ஜன் தலைமை தாங்​கி​னார். நிகழ்ச்​சியை வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தொடங்கி வைத்​தார்.க​ட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​த​வா​ணன்,​ காப்​பீட்​டுக் கழக ஊழி​யர் சங்​கச் செய​லா​ளர் சுகு​மா​றன்,​ மாவட்ட செஷன்ஸ் நீதி​மன்ற அரசு வழக்​க​றி​ஞர் சிவ​ராஜ்,​ முன்​னாள் அரசு வழக்​க​றி​ஞர் பி.ஜே.எக்ஸ். வேத​நா​ய​கம்,​ வாசிப்​போர் இயக்க நிóர்​வா​கி​கள் செந்​தில்​கு​மார்,​ திரு​ஞா​னம் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக