கோரிக்கை பதிவு

26 ஆயி​ரம் கன அடி தண்​ணீர் வீணா​கக் கட​லில் கலக்​கி​றது

கட​லூர் மாவட்​டத்​தில் பெரும்​பா​லான ஏரி​கள் நிர​மபி விட்​டன. இத​னால் உப​ரி​யான 26 ஆயி​ரம் கன அடி நீர் திறந்து விடப்​பட்டு வீணா​கக் கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. ​​ ​ வட​கி​ழக்​குப் பரு​வ​மழை தொடங்கி ஒரு வாரத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள பெரும்​பா​லான நீர்​நி​லை​கள் நிரம்பி விட்​டன. மிகப்​பெ​ரிய ஏரி​யான வீரா​ணத்​தின் மொத்த உய​ரம் 47.5 அடி. கொள்​ளி​டம் கீழ​ணை​யில் இருந்து பெறப்​ப​டும் காவிரி நீர் ​ நிறுத்​தப்​பட்டு விட்ட நிலை​யி​லும்,​ பெரம்​ப​லூர் மாவட்​டத்​தில் பெய்த மழை​யால் வீரா​ணம் ஏரிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்​கி​றது. இந்த நீர் முழு​வ​தும் வெள்​ளி​யங்​கால் வடி​கால் வாய்க்​கா​லில் 1000 கன அடி வீத​மும்,​ வெள்​ளாற்​றில் 600 கன அடி வீத​மும் கட​லுக்​குத் திறந்து விடப்​பட்டு இருக்​கி​றது. ​​ ​ வட​கி​ழக்கு பருவ மழைக் காலத்​தில் வீரா​ணம் ஏரி​யின் பாது​காப்​பைக் கருதி 43.5 அடிக்கு மேல் நீரைத் தேக்க வேண்​டாம் என்று பொதுப் பணித்​துறை அதி​கா​ரி​கள் அறி​வு​றுத்​தப்​பட்டு உள்​ள​னர். எனி​னும் வீரா​ணம் ஏரி​யின் நீர் மட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை 44 அடி​யாக உயர்ந்​தது. எனவே ஏரிக்கு வரும் நீர் முழு​வ​தும் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது. ​​ ​ கொள்​ளி​டம் கீழ​ணைக்கு கல்​ல​ணை​யில் இருந்து பெறப்​ப​டும் காவிரி நீர் முற்​றி​லும் நிறுத்​தப்​பட்டு விட்​டது. எனி​னும் மழை கார​ண​மாக அணைக்கு 7 ஆயி​ரம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்​ப​தா​க​வும்,​ இந்த நீர் முழு​வ​தும் கட​லில் திறந்து விடப்​ப​டு​வ​தா​க​வும் அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர். வட​வா​றில் கலக்​கும் மழை​நீ​ரா​லும்,​ நேரடி பாச​னப் பகு​தி​க​ளில் இருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நீரா​லும் மண​வாய்க்​கா​லில் ​(வடி​கால்)​ 10 ஆயி​ரம் கன அடி நீர்,​ வெள்​ளி​யங்​கால் வடி​கால் வாய்க்​கால் மூலம் கட​லுக்​குச் சென்று கொண்டு இருப்​ப​தாக,​ கீழணை விவ​சா​யி​கள் சங்​கச் செய​லா​ளர் விநா​ய​மூர்த்தி தெரி​வித்​தார். ​​ ​ வாலாஜா ஏரி,​ பெரு​மாள் ஏரி ஆகி​யவை நிரம்பி விட்​ட​தால் இவற்​றில் இருந்து சுமார் 13 ஆயி​ரம் கன அடி நீர் பர​வ​னாற்​றில் திறந்து விடப்​பட்டு கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. பெண்​ணை​யாறு,​ கெடி​லம் ஆறு ஆகி​ய​வற்​றில் சுமார் 2 ஆயி​ரம் கன​அடி நீர் எதற்​கும் பயன்​ப​டா​மல் கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. வெலிங்​டன் ஏரி​யில் கரை சீர​மைப்​புப் பணி​கள் நடப்​ப​தால்,​ ஏரிக்கு வரும் 1400 கன அடி நீர் வெள்​ளாற்​றில் திருப்பி விடப்​பட்டு இருக்​கி​றது. ​​ ​ ​ கொள்​ளி​டம்,​ வெள்​ளாறு,​ பர​வ​னாறு,​ மணி​முத்​தாறு,​ கெடி​லம்,​ பெண்ணை ஆறு ஆகி​ய​வற்​றின் மூல​மாக ​ ​ஆண்​டு​தோ​றும் 100 டி.எம்.சி. நீர் கட​லில் வீணா​கக் கலப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​விக்​கின்​ற​னர். ​​ ​ இது குறித்து அனைத்து விவ​சா​யச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் கட​லூர் மாவட்ட அமைப்​புச் செய​லா​ளர் பி.ரவீந்​தி​ரன் கூறு​கை​யில்,​ ஒரு வாரம் பெய்த மழை​யால் நீர்​நி​லை​கள் நிரம்பி 26 ஆயி​ரம் கன அடி நீர் வீணா​கக் கட​லில் கலக்​கி​றது. ஆனால் மழை முடிந்​த​தும் டெல்டா விவ​சா​யி​கள் மீண்​டும் மேட்​டூர் அணை​யின் கத​வைத் தட்ட வேண்டி இருக்​கி​றது.​ ​ ​ வீரா​ணம் ஏரி​யில் இருந்து 600 கன அடி நீர் பாச​னத்​துக்கு திறக்க கெஞ்ச வேண்​டிய பரி​தாப நிலை 15 தினங்​க​ளுக்கு முன் இருந்​தது. ஆனால் இப்​போது வீரா​ணம் ஏரிக்கு வரும் 1800 கன அடி நீரும் கட​லுக்​குத் திறந்து விடப்​ப​டு​வது எத்​தனை சோகம். ஆறு​க​ளில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்​றார். ​​ ​ கொள்​ளி​டம் கீழணை பாசன விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் கே.வி.கண்​ணன் கூறு​கை​யில்,​ விவ​சா​யி​கள் கூறு​வதை அரசு கேட்​பதே இல்லை. காவிரி,​ கொள்​ளி​டத்​தில் கத​வ​ணை​கள் கட்டி,​ பொன்​னேரி,​ வீரா​ணம் ஏரி ஆகி​ய​வற்றை ஆழப்​ப​டுத்​தி​னாலே போதும்,​ கொள்​ளி​டத்​தில் வீணா​கும் நீரை சேமிக்க முடி​யும். அரசு குறு​கி​ய​கால நோக்​கங்​க​ளைக் கைவிட்டு,​ தொலை நோக்​கு​டன் புதிய பாச​னத் திட்​டங்​களை உரு​வாக்க வேண்​டும் என்​றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக