கோரிக்கை பதிவு

தானி(ஆட்டோ ) ஓட்​டு​நர்​கள் வேலை நிறுத்தம்

கட​லூ​ரில் தானி (ஆட்டோ) ஓட்​டு​நர்​கள் வெள்​ளிக்​கி​ழமை வேலை நிறுத்​தம் செய்​த​னர். கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். வேலை நிறுத்​தம் கார​ண​மாக பள்ளி மாண​வர்​கள் பெரி​தும் பாதிக்​கப் பட்​ட​னர். ​ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும்,​ திருப்​பாப்பு​லி​யூர் பஸ் நிலை​யத்​தில் ஆட்​டோக்​கள் நிறுத்த அனு​ம​திக்க வேண்​டும்.உ​டல் ஊன​முற்​ற​வர்​கள்,​ நோயா​ளி​கள் போன்​ற​வர்​களை பஸ்​நி​லை​யத்​துக்​குள் ஆட்​டோக்​க​ளில் கொண்​டு​விட அனு​ம​திக்க வேண்​டும். வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கத்​தில் ஆட்​டோக்​க​ளுக்கு அதிக அள​வில் பெர்​மிட் கொடுப்​பதை நிறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி வெள்​ளிக்​கி​ழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்​ஷாக்​கள் வேலை​நி​றுத்​தம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது. ​இ​த​னால் கட​லூ​ரில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஆட்​டோக்​கள் இயங்க வில்லை. வேலை​நி​றுத்​தம் செய்த ஆட்டோ ஓட்​டு​நர்​கள்,​ உழ​வர் சந்தை அரு​கில் இருந்து ஊர்​வ​ல​மா​கப் புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​த​னர். அங்கு ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர். ​க​ட​லூ​ரில் ஆட்​டோக்​கள் ஓடா​த​தால் பள்​ளி​க​ளுக்​குச் செல்​லும் மாண​வர்​கள் பெரி​தும் அவ​திப்​பட்​ட​னர். வாகன வசதி உள்ள பெற்​றோர் பலர் தங்​கள் குழந்​தை​களை இரு சக்​கர வாக​னங்​க​ளில் அழைத்​துச் சென்​ற​னர். பேருந்துக​ளில் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்டதுடன் பலர் பேருந்துக​ளின் கூரை மீதும் பய​ணம் செய்​த​னர்.

1 கருத்து: