கோரிக்கை பதிவு

இடிந்து விழும் நிலையில் பெண்கள் விடுதி : அசம்பாவிதம் நிகழும் முன் நடவடிக்கை தேவை

கடலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏ.எல்.சி.,க்கு சொந்தமான பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி கட்டடம் மழையில் ஊறி பல இடங்களில் ஒழுகுவதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
கடலூர் போஸ்ட் ஆபீஸ் நிறுத்தம் அருகே பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில் ஏ.எல்.சி., பெண்கள் மற்றும் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இக்கட்டடத்தில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, கந்தசாமி நாயுடு கல்லூரி மற்றும் பெரியார் கலைக் கல்லூரியில் படிக்கும் வெளியூர் மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். ஓடுகளால் வேயப் பட்ட இக்கட்டடம் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுவர்கள் ஊறி ஸ்திரத் தன்மையை இழந்து வருகிறது.லேசான அளவில் மழை பெய்தாலே கூரை வழியே ஓழுகுகிறது. ஒரே அறையில் 10க்கும் மேற் பட் டோர் தங்கியிருப்பதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். வெளியே வடிகால் வசதியில்லாததால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகரித்துள் ளது. சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த போதுமான வசதி இல்லை.கூடுதலான பாத்ரூம், டாய்லெட் இல்லாததாலும் சிரமப்படுகின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பாதுகாப்புடன் அருகிலேயே இருப்பதால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த விடுதியில் சேர்க்கின்றனர். ஆனால் விடுதி கொஞ்சம் கொஞ்சமாக ஸ்திரத்தன்மையை இழந்து வருவதை கண்டு மாணவிகளின் பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர்.பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன் நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக