கோரிக்கை பதிவு

கடலூரில் முக்கிய இடங்களில் 'கேமரா' : பாதுகாப்பு கருதி போலீசார் நடவடிக்கை


கடலூர் காவல் துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது. டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, தம்புசாமி, சப் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, ஆனந்தபாபு, மோகன், கோவிந்தராஜ், வள்ளி விலாஸ் பாலு, அழகப்பா ராஜகோபால், ஓட் டல் அபிநயா ராம ஜனார்த்தனன், ஆனந்தபவன் வெங்கடசுப்பு மற் றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு, போலீசாருடன் பொதுமக் கள் மற்றும் வியாபாரிகளின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப் பட்டது.


டி.எஸ்.பி., ஸ்டாலின் பேசுகையில் "தற்போது நாட்டில் நிலவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக மக் கள் அதிகளவில் கூடும் நகை கடை, ஜவுளிக் கடை, சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்றவைகள்தான் அவர்களின் இலக்காக இருக்கும். இதுபோன்ற அச்சுறுத்தல் நமது மாவட்டத்தில் இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி நாம் செயல்பட வேண்டும். வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்களில் கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.நிறுவனத்தில் பணிபுரியும் ஆட் கள் குறித்து முழு விவரங்களையும் அவர்களது போட்டாவையும் வைத் திருக்க வேண்டும். இதற்காக தனியாக புத்தகம் பராமரிக்க வேண்டும். நிறுவனத்திற்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.நகரில் முக்கிய இடங்களில் "கேமரா' பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாக கருதப்படுகிறது' என பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக