கோரிக்கை பதிவு

போலீஸ் போல் நடித்து வாகன தணிக்கை செய்தவர் கைது

கடலூரில் போலீஸ் போல் நடித்து, வாகன தணிக்கையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.கடலூர் ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(37). இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் குண்டு சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது, திடீர்குப்பம் பாலசுப்ரமணியர் கோவில் எதிரே மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த வாலிபர் ஒருவர், சக்திவேலை வழி மறித்து, "உன்னிடம் வாகனம் ஓட்டுவதற்கான ஆவணங்கள் உள்ளதா? இல்லையெனில், 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்' என்றார்.சந்தேகமடைந்த சக்திவேல், அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் அவரை பிடித்து, கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கடலூர் திருப்பாதிரிபுலியூர், தானம் நகரைச் சேர்ந்த தனுசு(31) என தெரிந்தது. அவரது மோட்டார் சைக்கிளை (பி.ஒய்-01-யு-9459) பறிமுதல் செய்தனர்.புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தனுசுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக