கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
மர்ம நோயால் பன்றிகள் இறப்பு கடலூரில் தொற்று நோய் அபாயம்
கடலூரில் மர்ம நோய் காரணமாக இறந்த 50க்கு மேற்பட்ட பன்றிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி கெடிலம் ஆற்றங்கரையில் வீசுவதால் தொற்று நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் புதுப்பாளையம் மற்றும் முதுநகர் பகுதிகளில் 500க்கு மேற்பட்ட பன்றிகளை வளர்க்கின்றனர். கடந்த சில தினங்களாக கடலூர் புதுப்பளையம் பகுதியில் மர்ம நோய் காரணமாக தினமும் ஐந்திற்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன. அவற்றை அதன் உரிமையாளர்கள் கெடிலம் ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்தனர். ஆனால் தொடர்ந்து அதிகளவில் இறந்ததால் கடந்த சில நாட்களாக இறக்கும் பன்றிகளை சாக்கில் கட்டி கெடிலம் ஆற்றங்கரையில் வீசி விடுகின்றனர்.இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பன்றிகளை கடலூர் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றின் கரையில் ஆங்காங்கே வீசியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த கடலூர் கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் குழு புதுப்பாளையம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பன்றி வளர்ப்பவர்கள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்காததால் நோய் குறித்து ஆய்வு செய்ய ரத்த மாதிரி எடுக்க முடியாத நிலை உள்ளது.தொடர்ந்து பன்றிகளை மர்ம நோய் தாக்கி இறப்பதாலும், அவைகளை திறந்த வெளியில் வீசுவதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் பேனர் கலாசாரம் : பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்பு
கடலூர் மாவட் டத்தில் பரவியுள்ள டிஜிட் டல் பேனர் கலாசாரத்தினால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்."பருப்பு இல்லாமல் கல்யாணமா' என்பார்கள். ஆனால் இன்று டிஜிட்டல் பேனர் இல்லாமல் விழாவா என்கிற நிலை மக்கள் மத்தியில் வியாபித்துள்ளது. அரசு விழா, அரசியல் விழா, அமைச்சர் கள் விழா, கோவில் திருவிழா, மஞ்சள் நீராட்டு, காதணி விழா, பிறந்த நாள், காலமானார், நினைவஞ்சலி போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரதான சாலைகளில் டிஜி ட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் பரவியுள்ளது.தன்னுடைய உருவ படத்தை பேனர்களில் போட்டு பல நாட்கள் மக்கள் பார்வைக்கு வைப் பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்கும் விழாவை பயன்படுத்திக் கொண்டு சிலர் "மெகா சைசில்' 60, 70 அடி நீளத்திற்கு மேல் பேனர் வைக்கின்றனர். குறிப்பாக மஞ்சக்குப்பம், புதுச்சேரி - கடலூர் எல்லை, நியூசினிமா போன்ற குறுகலான இடங் களில் பேனர்கள் வைப்பதால் வாகனங்கள் வருவதை கவனிக்க முடியாமல் அதிக விபத்து ஏற்படுகிறது.அத்துடன் சாலையில் உள்ள கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிப்பதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சாலை என்பது டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான இடம் என ஆகிவிட்டது. இதனை வைப்பதற்கு போலீசில் முறையாக அனுமதி வாங்குவதும் கிடையாது.அனுமதியின்றி வைக் கப்படும் பேனர்களை போலீசார் கண்டு கொள்வதும் கிடையாது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 30 நாட் களுக்கு முன்பே பேனர் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து 30 நாட்கள் வரை கூட அப்புறப்படுத்தாமல் இருப்பதும் கடலூர் மாவட்டத்தில் சகஜமாகி விட்டது.இந்த பேனர் தயாரிப்பு ஷீட்டுகள் கூரை மீது போடுவதற்கு பயன்படுத்தப்படுவதால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் கிழித்துச் சென்று விடுகின்றனர். இதனால் பேனர் வைத்தவர்கள் தங்களின் எதிரணியினர் தான் வேண்டுமென்றே கிழித்து விட்டதாக கூறி ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த போலீஸ் துறை விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், கடலூர் மாவட் டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மோசமாக பரவி வருகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பேனர் களை அகற்றுமாறு எஸ்.பி., யிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்தும் பேனர் வைப்பதை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தலைவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கட்சித் தொண்டர் களால் வைக்கப்படும் பேனர்கள் பொது மக்களின் முகம் சுளிப்பிற்குள் ளாகி சம்மந்தப்பட்ட தலைவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டு மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைதான் ஏற்படும்.
கலெக்டர் கடும் எச்சரிக்கை...:இந்நிலையில் கலெக்டர், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க முன் அனுமதியை 7 நாட்களுக்கு முன்பே பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன் வைத்து முடிந்ததும் இரண்டு நாட்களில் அவர்கள் செலவிலேயே அகற்ற வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விளம்பர பலகை அமைத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வைத்து சட்டவரம்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனுமதியற்ற விளம்பர பேனர்கள் மற்றும் சாரங்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் துறையே அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்வதோடு, வழக்கும் தொடரப்படும்.

கட்டுகள்
கடலூர் மாவட்டம்,
டிஜிட்டல் பேனர்
குப்பை மேடானது சில்வர் பீச்
விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

கடலூர்,
கடலூர் நகராட்சி,
சில்வர்பீச்
திண்டாடும் ஆளூம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புறக்கணிப்புப் புகாரில் எம்.ஆர்.கே?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில், நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய முன்று தொகுதிகள் மட்டுமே தி.மு.க-வுக்குக் கிடைத்தன. பண்ருட்டி, மங்களுர், விருத்தாசலம், காட்டுமன்னார்குடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் எதிர்க் கட்சிகள்தான் வெற்றி பெற்றன. தி.மு.க. சார்பில் வென்ற மூன்று பேரில் ஒருவர், தி.மு.க. மாவட்டச் செயலாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். மற்ற இருவர்... நெல்லிக்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன்.
ஏனோ அமைச்சருக்குப் பிடிக்காமல்போனதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் ஸீட் கிடைக்காது என்ற பேச்சு மாவட்டம் முழுக்க அடிபடுகிறது. இறங்கி விசாரித்தால், மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுகிறார்கள்.
''ஆரம்பத்தில் இருந்தே அமைச்சருக்கும், அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும்
ஆகவே ஆகாது. அமைச்சரே மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், அந்த
எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த தடவை ஸீட் கொடுக்க மாட்டார். தவிர, தொகுதி மறு சீரமைப்பில்... சபா.ராஜேந்திரனோட நெல்லிக் குப்பம் தொகுதி காணாமல்போயிடுச்சு. அதனால், அவர் பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கார். ஆனா, அவர் எந்தத் தொகுதியைக் கேட்டாலும், அதை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிட அமைச்சர் முடிவு பண்ணிட்டார். பண்ருட்டி ஒன்றியத்தில் சபாவுக்கு கட்சி செல்வாக்கு அதிகம். அதனால், அ.தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவரின் மகனை தி.மு.க-வுக்கு அமைச்சர் இழுத்துட்டார். இப்போ, பண்ருட்டி ஒன்றியமே அவருடைய கையில் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிட்டாங்க.
அதேபோல, கடலூர் தொகுதியில் அய்யப்பனுக்கு ஸீட் கொடுக்காத எம்.ஆர்.கே., அங்கே இளைஞர் அணியைச் சேர்ந்த பழக்கடை ராஜாவையும், ஏ.ஜி.ராஜேந் திரனின் மகன் சுந்தரையும் முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சுட்டார்!'' என்கிறார்கள் எம்.ஆர்.கே-யின் மூவ் தெரிந்த தி.மு.க-வினர்.
''கடந்த முறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மத்திய சாலை மேம்பாட்டு நிதியான
33 கோடி ரூபாயில் விஜயகாந்த்தின் விருத்தாசலம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது ஆறு கோடி ரூபாய். ஆனால், சபாவின் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு ஒரு ரூபாய்கூட கிடையாது. அதேபோல, அ.தி.மு.க. தொகுதிகளான சிதம்பரத்துக்கு ஆறு கோடி ரூபாயும், புவனகிரிக்கு ஐந்து கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அய்யப்பனின் கடலூர் தொகுதிக்கு வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்கள். இந்த ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. மொத்த நிதியான 40 கோடி ரூபாயில், நெல்லிக்குப்பத்துக்கு ஒரு கோடியும், கடலூருக்கு 50 லட்சமும்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது'' என ஆதங்கத்தோடு சொல்கிறார்கள் அந்த இரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும்.
கடலூர் மாவட்டப் பொறுப்பாளரான உடன்பிறப்பு ஒருவர், ''தனக்குப் பிடிக்காத ஆட் களோட பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சா, அமைச்சர் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். சமீபத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம் தன் தங்கச்சியோட கல்யாணப் பத்திரிகையில் அமைச்சர் பொன்முடியின் படத்தைப் போட்டதால், அந்தக் கல்யாணத்தையே எம்.ஆர்.கே. புறக் கணிச்சார். கட்சி நிகழ்ச்சிகளை முன்கூட்டி சொல்லாமல் பிடிக்காத ஆட்களைத் தவிக்கவிடுவதும் எம்.ஆர்.கே-வுக்கு வழக்கம். பிடிக்காத நிர்வாகிகள் இருக்கும் ஏரியாவுக்கு, அரசு நலத் திட்ட உதவிகளும் சரிவரக் கிடைக்காது!'' என்றார் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு.
சொந்தக் கட்சிக்காரர்களிடம் இந்த அளவுக்கு முரண்டு காட்டும் அமைச்சர், பா.ம.க-விடம் மட்டும் பாசமழை பொழிவாராம். நெய்வேலி தொகுதியில் முன்னாள் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளரான குணசேகரன் நடத்திய ஒரு விழாவை எம்.ஆர்.கே. புறக்கணித்ததின் பின்னணியையும் 'பா.ம.க. பாசத்'தோடு முடிச்சிடுகிறார்கள் தொகுதி உடன்பிறப்புகள்.
இது குறித்துப் பேசும் எம்.ஆர்.கே-யின் ஆதரவாளர்கள், ''சபா.ராஜேந்திர னையும் அய்யப்பனையும், அமைச்சர் மரியாதையோடுதான் நடத்துகிறார். கட்சி விழாக்களிலும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சிப் பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்குவதைக்கூட அவர்கள் குற்றமாக்குவதில்
கொஞ்சமும் நியாயம் இல்லை. விஜயகாந்த் தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கினால்தானே, அடுத்த முறையாவது அங்கே தி.மு.க-வை ஜெயிக்கவைக்க முடியும். சின்னச் சின்ன கசப்புகளைப் பெரிதாக்கி, அமைச்சருக்கு சங்கடத்தை உண்டாக்க சிலர் திட்டமிடுகிறார் கள்!'' என்கிறார்கள்.
இதற்கிடையில் எம்.ஆர்.கே-யை யும் இரு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் அழைத்து ஸ்டாலின் சமாதானப் பஞ்சாயத்துப் பேசியதாகவும் ஒரு தகவல்!
ஏனோ அமைச்சருக்குப் பிடிக்காமல்போனதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் ஸீட் கிடைக்காது என்ற பேச்சு மாவட்டம் முழுக்க அடிபடுகிறது. இறங்கி விசாரித்தால், மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுகிறார்கள்.
''ஆரம்பத்தில் இருந்தே அமைச்சருக்கும், அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும்
எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த தடவை ஸீட் கொடுக்க மாட்டார். தவிர, தொகுதி மறு சீரமைப்பில்... சபா.ராஜேந்திரனோட நெல்லிக் குப்பம் தொகுதி காணாமல்போயிடுச்சு. அதனால், அவர் பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கார். ஆனா, அவர் எந்தத் தொகுதியைக் கேட்டாலும், அதை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிட அமைச்சர் முடிவு பண்ணிட்டார். பண்ருட்டி ஒன்றியத்தில் சபாவுக்கு கட்சி செல்வாக்கு அதிகம். அதனால், அ.தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவரின் மகனை தி.மு.க-வுக்கு அமைச்சர் இழுத்துட்டார். இப்போ, பண்ருட்டி ஒன்றியமே அவருடைய கையில் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிட்டாங்க.
அதேபோல, கடலூர் தொகுதியில் அய்யப்பனுக்கு ஸீட் கொடுக்காத எம்.ஆர்.கே., அங்கே இளைஞர் அணியைச் சேர்ந்த பழக்கடை ராஜாவையும், ஏ.ஜி.ராஜேந் திரனின் மகன் சுந்தரையும் முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சுட்டார்!'' என்கிறார்கள் எம்.ஆர்.கே-யின் மூவ் தெரிந்த தி.மு.க-வினர்.
''கடந்த முறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மத்திய சாலை மேம்பாட்டு நிதியான
33 கோடி ரூபாயில் விஜயகாந்த்தின் விருத்தாசலம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது ஆறு கோடி ரூபாய். ஆனால், சபாவின் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு ஒரு ரூபாய்கூட கிடையாது. அதேபோல, அ.தி.மு.க. தொகுதிகளான சிதம்பரத்துக்கு ஆறு கோடி ரூபாயும், புவனகிரிக்கு ஐந்து கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அய்யப்பனின் கடலூர் தொகுதிக்கு வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்கள். இந்த ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. மொத்த நிதியான 40 கோடி ரூபாயில், நெல்லிக்குப்பத்துக்கு ஒரு கோடியும், கடலூருக்கு 50 லட்சமும்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது'' என ஆதங்கத்தோடு சொல்கிறார்கள் அந்த இரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும். கடலூர் மாவட்டப் பொறுப்பாளரான உடன்பிறப்பு ஒருவர், ''தனக்குப் பிடிக்காத ஆட் களோட பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சா, அமைச்சர் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். சமீபத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம் தன் தங்கச்சியோட கல்யாணப் பத்திரிகையில் அமைச்சர் பொன்முடியின் படத்தைப் போட்டதால், அந்தக் கல்யாணத்தையே எம்.ஆர்.கே. புறக் கணிச்சார். கட்சி நிகழ்ச்சிகளை முன்கூட்டி சொல்லாமல் பிடிக்காத ஆட்களைத் தவிக்கவிடுவதும் எம்.ஆர்.கே-வுக்கு வழக்கம். பிடிக்காத நிர்வாகிகள் இருக்கும் ஏரியாவுக்கு, அரசு நலத் திட்ட உதவிகளும் சரிவரக் கிடைக்காது!'' என்றார் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு.
சொந்தக் கட்சிக்காரர்களிடம் இந்த அளவுக்கு முரண்டு காட்டும் அமைச்சர், பா.ம.க-விடம் மட்டும் பாசமழை பொழிவாராம். நெய்வேலி தொகுதியில் முன்னாள் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளரான குணசேகரன் நடத்திய ஒரு விழாவை எம்.ஆர்.கே. புறக்கணித்ததின் பின்னணியையும் 'பா.ம.க. பாசத்'தோடு முடிச்சிடுகிறார்கள் தொகுதி உடன்பிறப்புகள்.
இது குறித்துப் பேசும் எம்.ஆர்.கே-யின் ஆதரவாளர்கள், ''சபா.ராஜேந்திர னையும் அய்யப்பனையும், அமைச்சர் மரியாதையோடுதான் நடத்துகிறார். கட்சி விழாக்களிலும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சிப் பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்குவதைக்கூட அவர்கள் குற்றமாக்குவதில்
இதற்கிடையில் எம்.ஆர்.கே-யை யும் இரு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் அழைத்து ஸ்டாலின் சமாதானப் பஞ்சாயத்துப் பேசியதாகவும் ஒரு தகவல்!
| - கரு.முத்து |
கட்டுகள்
கடலூர்
கடலூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடை பணி முடக்கம்
கடலூரில் பெய்த கனமழை காரணமாக சகதி நகரமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் மஞ்சக்குப்பம் மைதானம், ஜட்ஜ் பங்களா ரோடு, செம்மண்டலம் பகுதி வெள்ளக் காடானது. ஏற்கனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்ட
மண்மேடுகள் கரைந்து சாலைகள் சகதியானது. மேலும் சரியாக மூடாத பள்ளங்களில் மண் உள்வாங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது கடலூர் நகரின் பிரதான சாலைகளான பீச்ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, புதுப் பாளையம் மெயின்ரோடு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இச்சாலைகளில் பெரிய அளவிலான பைப்புகள் பதித்து வருவதால் சாலைகளில் அதிக ஆழம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களும் தூர்ந்து போய் உள்ளன. கன மழையால் முழு வீச்சில் நடந்து வந்த பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடங்கியுள்ளன.

பாதாளச் சாக்கடை
மாவட்டத்தில் 2ம் நாளாக தொடர் மழை : கடலூரில் அதிகபட்சம் 75 மி.மீட்டர்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூரில் அதிகபட்சமாக 75 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்றால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகங் கள் வேகமாக தமிழக பகுதியில் செல்வதால் ஆங் காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 11 மணி முதல் அதிக அளவில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து சீராக மழை பெய்து வருவதால் தண் ணீர் வழிந்தோடி வீணாகாமல், நிலத்தில் நன்றாக ஊறி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் உயரக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
கடலூரில் 75மி.மீ., வானமாதேவி 69.20, புவனகிரி 65, கொத்தவாச்சேரி 54, அண்ணாமலை நகர் 40.60, பண்ருட்டி 40, பரங் கிப்பேட்டை 39, மேமாத் தூர் 38, லால்பேட்டை 31, சேத்தியாதோப்பு 31, லக் கூர் 30, காட்டுமன்னார் கோவில் 28, விருத்தாசலம் 24.40, குப்பநத்தம் 22.20, பெலாந்துரை 20, ஸ்ரீமுஷ் ணம் 20, கீழ்ச்செருவாய் 16, தொழுதூர் 15மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல்: கிருஷ்ணசுவாமி பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:இந்த கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நிர்வாகத்தை அணுகியபோது மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர்.புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ், கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.
கட்டுகள்
கடலூர்,
கல்வி,
கிருஷ்ணசுவாமி கல்லூரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)