கோரிக்கை பதிவு

கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்

நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக