கோரிக்கை பதிவு

பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில்

பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் அதிகமாக உள்ளது. ஆனால் இரண் டாம் வகுப்புக்கு உட்காரும் வசதிக்கு முன்பதிவு இல்லாததால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
சென்னை & திருச்சி இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினசரி காலை சென்னை எழும்பூரில் 8.20க்கு புறப்படும் இந்த ரயில், மாலை 4.35க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 9.10க்கு புறப்படும் ரயில் மாலை 5.45க்கு சென் னையை வந்தடைகிறது.
ஆனால் இதன் முன்பதி வால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்புக்கான உட்கார்ந்து செல்லும் சீட்டுகளுக்கு முன்பதிவு இல்லை. அதற்கு மாறாக 10 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கே முன்பதிவு (பர்த்கோச்) உள்ளது. பொது வாக பகல் நேர ரயில்களில் பெரும்பாலான பயணிகள் தூங்க மாட்டார்கள். ஆனால் இந்த ரயிலில் 10 பெட்டிகள் தூங்கும் வசதியாக இருப்பதால் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு, மற்றும் பய ணத்தை யாரும் விரும்பவில்லை.
அதற்கு மாறாக பயணி கள் அதிகம் விரும்பும் இரண்டாம் வகுப்பு உட் காரும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளை அதிக அளவில் இணைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பயணிகள் அவதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக