கோரிக்கை பதிவு

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரூ.5.50 லட்சம் டாப்-அப் கார்டுகள் மாயம்

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள டாப்-அப் கார்டுகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப் புள்ள 70 ஆயிரம் டாப்-அப் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்போது  பொறுப்பில் இருந்த அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். இதன் பின் அவர் வெளியூருக்கு மாறுதலாகி சென்று, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அலுவலக தணிக்கையின் போது  10 ஆயிரம் டாப்-அப் கார்டு களை கொண்ட ஒரு பாக்ஸ் விற் பனை செய்ததற்கான கணக்கில் வரவில்லை. இது குறித்து அலுவலகத்தில் விசாரணை செய்த தில் மாயமான டாப்-அப் கார்டுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமான கார்டுகளின் மதிப்பு 5.50 லட்சம் ரூபாயாகும். மாயமான 3,000 கார்டுகள் விருதுநகர் மாவட்டத்தில்  பயன்பாட்டில் உள்ளன.  மீதமுள்ள 7,000 கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. 

கார்டுகள் எப்படி காணாமல் போனது... யார் எடுத்துச் சென்றது என்ற விபரங்களை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட் டனர். மேலும் கார்டுகள் மாயமானது குறித்து கடலூர் பி.எஸ். என்.எல்., முதன்மை கணக்கு அதிகாரி ராஜா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதில் மாயமானது மூன் றாம் எண் பெட்டியாகும். விற்பனை செய்தவர்கள் இரண்டு பெட்டிகளை விற்பனை செய்த பின் மூன்று பெட்டி மாயமானது தெரியாமல் எப்படி நான்காவது பெட்டியை விற்பனை செய்துள் ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை செய்து குற்றவாளி அல்லது சந்தேக நபர்கள் குறிப்பிட்டு  புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்றும் அணிக்கு முதல் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய், நான்காம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.  போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

மாறுவேடத்தில் அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு : கடலூர் அரசு மருத்துவமனை சீர்கேடு அம்பலம்

கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து  10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண் டதை கண்கூடாக பார்க்க முடிந் தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது.  சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.

கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப் படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு அமைத் தது. இந்த குழு தனியார் பள்ளிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கட்டணத்தை நிர்ணயித்துள் ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங் கப்படும்.

கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்

நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவந்திபுரம் கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பை வியாழக்கிழமை சாமி கும்பிட்டார்.இதற்காக எடியூரப்பா வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுவை வந்தார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாகத் திருவந்திபுரத்துக்கு காலை 9 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் காரில் எடியூரப்பா திருவந்திபுரம் மலை மீதுள்ள லட்சுமி ஹயகிரீவர் ஆலயத்துக்குச் சென்றார். கோயில் வாயிலில் மேளதாளம் முழங்க அர்ச்சகர்கள் நீலமேகப் பட்டாச்சாரியார், நரசிம்ம பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோயிலில் எடியூரப்பா சிறப்பு வழிபாடுகள் செய்தார். அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து தேவநாதசாமி கோயிலுக்கு வந்தார். அங்கும் எடியூரப்பாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.எடியூரப்பா வருகையை முன்னிட்டு தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.சிறப்பு பூஜைகளை முடித்துக் கொண்டு எடியூரப்பா 10-07 மணிக்கு மீண்டும் புதுவை மாநிலம் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு கடலூரில் புதன்கிழமை மாலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  போலீஸ் உத்தரவின்பேரில் திருவந்திபுரத்தில் பிரதானக் கடை வீதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எடியூரப்பா செல்லும் பாதை முழுவதும், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோயில் வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சம் வசூல்

கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.