கோரிக்கை பதிவு

கட​லூர் நக​ராட்​சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட​லூர் நக​ராட்​சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்றாவிட்டால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்

கடலூர் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை உரிமையாளர்கள் அகற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் கொசு தொல்லை ஒழிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கி னார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா முன்னிலை வகித்தார். கொசுக்களை நிரந்தரமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து கொசு ஒழிப்பு குழு கூட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். நகர விரிவாக்கங்களால் பெருகி வரும் குடியிருப்புகள் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டு வருவதால் நக ராட்சி நிர்வாகங்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவதில் பிரச்சனை ஏற்படுகிறது என எடுத் துரைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட் சியர் சீத்தாராமன் பேசுகை யில், “நகர விரிவாக்கம் காரணமாக பஞ்சாயத்துக்களில் அதிக எண்ணிக்கை யில் குடியிருப்புகள் பெருகி வருகிறது. இங்கு முறைப்படி கழிவு நீர் வெளியேற்ற நடவடிக்கை என்பது குறை பாடாக உள்ளது.
எனவே பஞ்சாயத்து எல்லையில் வீடுகள் பெருகி வந்தாலும் அதனை பஞ்சாயத்து தலைவர்கள் கொசு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனம் பொருட்கள் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் கொசுக் கள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது என ஆய்வில் தெரிய வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வீட்டு வாயில்களில் சாக்கடை உள்ளிட்ட நிரந்தர நீர் தேக்கங்களை தவிர்ப்பதற்கு பொது சுகாதார சட்டம் 1939ம் ஆண்டு 84(1), 86 மற்றும் 87(1) பிரிவுகளின் படி சட்ட ரீதியாக நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது“ என்றார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கட​லூ​ரில் கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க ​ ​பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை

கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க,​​ கட​லூர் பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை கட்​டும் பணி தொடங்​கப்​பட்டு இருக்​கி​றது.​ ​க​ட​லூ​ரை​ யும் புதுவை மாநி​லம் கும்​தா​மேடு ​(பரிக்​கல் பட்டு ஊராட்சி)​ பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ இப்​ப​கு​தி​யில் பெண்ணை ஆற்​றின் வடக்​குக் கரை புதுவை மாநி​லத்​தி​லும்,​​ தெற்​குக் கரை கட​லூர் மாவட்​டத்​தி​லும் உள்​ளது.​ கட​லூர் அருகே தாழங்​குடா கடற்​க​ரை​யில் பெண்​ணை​யாறு கட​லில் சங்​க​மிக்​கி​றது.​ ​தா​ழங்​கு​டா​வில் இருந்து 15 கி.மீ.​ தூரம் வரை கடல் நீர் உள்​பு​குந்து விட்​டது.​ இத​னால் பெண்​ணை​யாற்​றின் கரை​யில் உள்ள கட​லூர் மாவட்​டம் மற்​றும் புதுவை மாநி​லத்​தில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் விளை நிலங்​க​ளில்,​​ நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ இத​னால் கட​லூர் நக​ரில் குடி​யி​ருப்​புப் பகு​தி​க​ளி​லும் நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ ​எ​னவே பெண்ணை ஆற்​றில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்று கட​லூர் எம்​எல்ஏ கோ.அய்​யப்​பன் தொடர்ந்து சட்​டப் பேர​வை​யி​லும் மாவட்ட நிர்​வா​கத்​தி​ட​மும் கோரிக்கை எழுப்பி வரு​கி​றார்.​ புதுவை மாநில விவ​சா​யி​க​ளும் விளை நிலங்​கள் பாதிக்​கப்​ப​டு​வ​தைத் தடுக்க இதே கோரிக்​கையை முன் வைத்​த​னர்.​பு​துவை மாநி​லம் மத்​திய அர​சின் நேரடி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் யூனி​யன் பிர​தே​ச​மாக இருப்​ப​தா​லும்,​​ திட்​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிதி தாரா​ள​மா​கக் கிடைப்​ப​தா​லும்,​​ விவ​சா​யி​க​ளின் கோரிக்​கையை ஏற்று பெண்ணை ஆற்​றில் தடுப்​பணை கட்ட முன்​வந்து இருக்​கி​றது.​ கட​லூர் மாவட்ட நிர்​வா​கத்​தின் ஒப்​பு​த​லு​டன் இந்​தத் தடுப்​பணை,​​ புதுவை அர​சால் ரூ.12 கோடி​யில் கட்​டப்​ப​டு​கி​றது.​ ​க​ட​லூர்-​ கும்​தா​மேடு இடையே 254 மீட்​டர் நீளத்​தில் 5 அடி உய​ரத்​தில்,​​ இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ கட​லூர்-​ கும்​தா​மேடு இடையே பெண்ணை ஆற்​றின் குறுக்கே இரு​மா​நில மக்​கள் பயன்​ப​டுத்​தும் பால​மா​க​வும் இது அமை​யும்.​ ​த​டுப்​பணை கட்டி முடிக்​கப்​பட்ட பின்,​​ கடல் நீர் உள்​பு​கு​வது பெரு​ம​ள​வுக்​குத் தடுக்​கப்​ப​டும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ஆண்​டின் பெரும்​ப​குதி நாள்​கள்,​​ ​ தடுப்​ப​ணை​யில் இருந்து ஆற்​றில் குறைந்த பட்​சம் ஒரு கி.மீ.​ தூரத்​துக்கு ​ தண்​ணீர் தேங்கி நிற்​க​வும் வாய்ப்பு உள்​ளது.​ ​ இத​னால் இரு மாநி​லங்​க​ளை​யும் சேர்ந்த 5 ஆயி​ரம் ஏக்​கர் விளை நிலங்​கள் உவர் நீரில் இருந்து காப்​பாற்​றப்​ப​டும் என்​றும் எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ​பு​துவை அரசு இந்​தத் தடுப்​ப​ணை​யைக் கட்​டு​வது போல்,​​ தமி​ழக அர​சும் ​ பெண்ணை ஆற்​றில் மேலும் சில இடங்​க​ளில் தடுப்​ப​ணை​க​ளைக் கட்ட வேண்​டும்.​ அத​னால் கடல் நீர் உள்​பு​கு​வது தடுக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ பெண்ணை ஆற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்டு ஆண்​டு​தோ​றும் வீணா​கக் கட​லில் கலந்​து​கொண்டு இருக்​கும் நீர்,​​ தடுப்​ப​ணை​க​ளில் தேக்கி வைக்​கப்​பட்டு,​​ இப்​ப​கு​தி​க​ளில் நிலத்​தடி நீர் மட்​டம் உயர ஏது​வாக இருக்​கும் என்​றும் எம்​எல்ஏ அய்​யப்​பன் தெரி​வித்​தார்.

ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் சவப்​பாடை ஊர்​வ​லம்

கட​லூ​ரில் பழு​த​டைந்து கிடக்​கும் சாலை​களை சீர​மைக்க வலி​யு​றுத்தி இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும்,​ ஆர்ப்​பாட்​ட​மும் நடத்​தி​னர். ​ரூ. 44 கோடி​யில் தொடங்​கப்​பட்ட பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டம் 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​பட வேண்​டும். ஆனால் 30 மாதங்​க​ளுக்கு மேல் ஆகி​யும் முடி​வ​டைய வில்லை.60 சதம் பணி​கள்​கூட நிறை​வ​டைய வில்லை. இத் திட்​டத்​துக்​காக தோண்​டப்​பட்ட பள்​ளங்​க​ளால் வாக​னப் போக்​கு​வ​ரத்து பெரி​தும் சிர​ம​மாக இருக்​கி​றது. சாலை​கள் குண்​டும் குழி​யு​மாக மாறி நடந்து செல்​வ​தற்​கும் லாயக்​கற்​ற​தாக மாறி​விட்​டது. இத​னால் விபத்​து​கள் ஏற்​ப​டாத நாளே இல்லை. ​எ​னவே பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டத்தை துரி​த​மாக நிறை​வேற்ற நட​வ​டிக்கை எடுக்​காத கட​லூர் நக​ராட்​சி​யைக் கண்​டித்து இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும் நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்ப்​பாட்​ட​மும் அறி​வித்து இருந்​த​னர். ச​வப்​பாடை ஊர்​வ​லத்​துக்கு போலீஸ் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. ​ ​ எனவே கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர்.அதே நேர்த்​தில் யாரும் எதிர்​பா​ராத வித​மாக,​ ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தைச் சேர்ந்த இளை​ஞர்​கள் சிலர் எங்​கி​ருந்தோ சவப்​பாடை ஒன்றை தயா​ரித்து எடுத்​துக் கொண்டு தப்​பட்​டை​கள் முழங்க நக​ராட்சி அலு​வ​ல​கத்​துக்கு வந்​து​விட்​ட​னர்.அ​வர்​களை போலீ​ஸôர் பலர் தடுத்து நிறுத்த முன்​றும் முடி​ய​வில்லை. சவப்​பா​டை​யில் நக​ராட்சி அலு​வ​ல​கத்​தின் மாதிரி,​ தெர்​மா​கோல் அட்டை மூலம் செய்​யப்​பட்டு வைக்​கப்​பட்டு இருந்​தது. ​ச​வப்​பா​டை​யைக் கொண்​டு​வர போலீஸ் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து,​ ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​ய​வர்​க​ளுக்​கும் போலீ​ஸô​ருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.ந​க​ராட்சி அலு​வ​லக வாயி​லுக்கு வந்​த​தும் சவப்​பா​டையை போலீ​ஸôர் பிய்த்து எறிந்​த​னர்.அ ​தைத் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டம் மீண்​டும் தொடர்ந்​தது. ஆர்ப்​பாட்​டத்​துக்கு இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்க கட​லூர் நக​ரச் செய​லா​ளர் ஆர்.அமர்​நாத் தலைமை தாங்​கி​னார்.ந​கர நிர்​வா​கி​கள் ஆர்.மணி​வண்​ணன்,​ கே.பி.பாலு செந்​தில்​கு​மார்,​ ரஜி​னி​ஆ​னந்த்,​ தென்​ன​சன்,​ கார்த்​தி​கே​யன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். மாவட்​டச் செய​லா​ளர் ராஜேஷ் கண்​ணன்,​ தலை​வர் எஸ்.அசோ​கன்,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.