சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ், இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர்&பாலூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதம்
கடலூரில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் தினமும் பஸ், லாரி, கார், போன்ற வாகனங்கள் செல்கிறது. இதுதவிர இரு சக்கர வாகனங்களும் அதிகம் செல்கிறது. குறுகிய சாலையாக இருந்ததால், அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.
விபத்துகளை தடுக்கும்பொருட்டு சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கப்பட்டது. கீழ்அருங்குணம் பகுதியில், சாலையின் ஒரு பக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்காததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்துகளுக்கு வழி விட்டு செல்ல முற்படும் போது சாலையின் ஒரத்தில் உள்ள பள்ளம் தெரியாமல், பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதேபோல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துகளை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட பணி, முடிவடையாமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நெல்லிக்குப்பத்தை அடுத்த கீழ்அருங்குணம் பகுதியில் சாலை அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் நடந்து வருகிறது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
நெடுஞ்சாலை
சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்த உள்ள ஐ.நா குழுவினரை சந்திக்க, விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபதி, பொதுச்செயலாளர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் கீழ் அனுவம்பட்டு ரவீந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் உருவாக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற் சாலைகளால் நமது உணவு, குடிநீர், சுவாசிக்கும் காற்று மூன்றும் நஞ்சாகிவிட்டது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் வேக மாக சிதைக்கப்பட்டு வருகின்றன. சிப்காட் தொழிற்சலைகளால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகி றது. உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள் ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள விவசாய விளை நிலங்களை பாதுகாப்பது விவசாயிகளின் கடமை. இது குறித்து ஆய்வு நடத்த ஐ.நா சபையின் உணவு உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி ஆலிவர் ஷட்டர் தலைமையிலான குழு இன்று கடலூர் வரு கிறது. குழுவில் வழக்கறி ஞர், மருத்துவர், உணவுப்பொருட்கள் உற் பத்தி திறன் குறித்து ஆய்வு நடத்தும் பேராசிரியர்கள், விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர். பியான் அமைப் பின் தமிழ்நாடு தலைவர் குருசாமி குழுவை வழி நடத்துகிறார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இக்குழுவினர் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளையும், அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடலோர பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்துகின்றனர்.தொடர்ந்து இன்று(31ம் தேதி) மாலை கடலூர் டவுன்ஹாலில் விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்கள். இந்த நிகழ்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனை வரும் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாது காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
விவசாயிகளுக்கு அழைப்பு
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிப்காட்
குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்
கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங்பவுடர் தொட்டியில் கலக்கப்படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு, குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை. மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
குடிநீர் வாரியம்
தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி, சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது.இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும்.30 நிமிட கால அளவிலான தமிழ், ஆங்கிலம், சமூகவியல், பொருளாதாரம், வணிகம், மக்கள் தொகையியல், அரசியல் பொது நிர்வாகம், காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்
கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு
கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களுக்கு எதிராக அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களை கூட்டமைப்பு எதிர்க்கும். கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது. மீனவர்களை மலைவாழ் மக்களுடன் இணைத்து இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளில் மீனவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். மே 9-ம் தேதி கடலூரில் மாநில மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அனைத்து மீனவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைமை வகித்தார். ஆர்.கன்னியப்பன், சுப்புராயன், ஏழுமலை, பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜேபியார் பேரவைத் தலைவர் கனகராஜ் வரவேற்றார். அகில இந்திய மீனவர் சங்க துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிப்காட்,
தொழிற்சாலை,
மீனவர்கள்
எமனாக மாறி வரும் மணல் சாலைகள்
கடலூர் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்மையால், பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு மக்களுக்கு எமனாக மாறிவருகிறது.தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகராட்சி பகுதி வழியாக, 15 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது. பல கோடி செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, முறையாகப் பராமரிப்பு இல்லாததால், பெரும்பகுதி மணல் படிந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்கள் பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், திடீர் கோயில்கள், குளிர்பானக் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இச்சாலை நிர்மாணிக்கப்பட்ட பிறகு, வாகனப் போக்குவரத்து பன்மடங்கு பெருகிவிட்டது.அதற்கேற்ப விரிவுப்படுத்தும் பணியையோ, பராமரிப்புப் பணிகளையோ செய்யாததால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறி வருகிறது.பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கான அகலம் போக மீதம் உள்ள பகுதி முழுவதும், ஒரு அடி உயரத்துக்கு மணல் படிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் எமனாக மாறி இருக்கிறது.இந்த மணல் மேடுகளில் சிக்கி விழுந்து, அவர்கள் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூவர் இறந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை நடைபாதை முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலர்களைக் கண்டு, ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் கவலைப்படவே இல்லை. இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.அதற்கும் பலன் ஏதும் இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கடந்த 19-ம் தேதி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பு நாடகமாக நடந்தது. எந்த ஆக்கிரமிப்பையும்அகற்றவில்லை.எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்ற அளவுகூட அவர்களிடம் இல்லை. வெறுமனே விளம்பர போர்டுகளை மட்டுமே வைத்து அகற்றுமாறு கூறிச் சென்றனர். அதைக்கூட யாரும் அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு இன்றி மண் மேடிட்டுக் கிடப்பது மக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
கட்டுகள்
ஆக்கிரமிப்புகள்,
கடலூர்,
கடலூர் நகராட்சி,
கடலூர் மாவட்டம்,
நெடுஞ்சாலை துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)