கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்
கடலூரில் பாதாள சாக் கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத் தும் பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ் சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த் தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
பாதாளச் சாக்கடை
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்
மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.
இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடை யாள அட்டை, வங்கி பாஸ் புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண் ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்
கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்: நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார். ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது. நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
கடலூர் மாவட்ட வளர்ச்சி
எப்போது தெரியும்?
பள்ளிக் கல்விக் கட்டண வசூல் ஒழுங்குமுறைச் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், பள்ளிகளுக்கு எத்தகைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு என்பது தெரியாமல் அவதிப்படுவது வழக்கம்போல பெற்றோர்கள் மட்டுமே!பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன என்று மக்கள் தாங்கமாட்டாமல் புலம்பியதால்தான் அரசு இந்தப் பிரச்னையில் ஆர்வம் காட்டியது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், இந்தச் சட்டம் செல்லும் என்று தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசுக்கு இதைவிட சாதகமான தீர்ப்பு வேறு ஏதும் கிடையாது. ஆனாலும், இதுவரை அரசு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பதற்காக, தனியார் பள்ளிகள் சும்மா இருந்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர் சேர்க்கை சின்ன நோட்டுப் புத்தகத்திலும், வெறும் துண்டுச் சீட்டிலுமாக நடந்து கொண்டிருக்கிறது. சில பள்ளிகள் கட்டணங்களையும் வசூலித்துவிட்டன. சில பள்ளிகள் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்துகின்றன. கட்டணங்களைப் பிறகு சொல்கிறோம் என்று கூறுகின்றன. இத்தனை நடைமுறை ஊழல்களுக்கும் காரணம்- இன்னமும் அரசு தான் நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதுதான்.இந்தச் சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் தங்கள் விண்ணப்பங்களை விற்பனை செய்யவில்லையே தவிர, மாணவர் சேர்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றன. பெற்றோர்களும், முந்திக்கொண்டு குழந்தைகளைச் சேர்க்காமல் அரசு அறிவிப்புக்காகக் காத்திருந்தால், நம் குழந்தைக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக இந்தப் பள்ளிகள் சொல்லும் அனைத்துக்கும் கட்டுப்பட்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் பணத்தைக் கொடுத்து அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.சென்ற ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. 2008-09-ம் ஆண்டுகளில் வசூலித்த கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் வரவு செலவுக் கணக்குகள் ஆகியவற்றை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் வழக்குத் தொடுத்ததுடன், வழக்கு முடியும்வரை நமது வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவையும் எடுத்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு ஓராண்டு காலம் ஆன நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் என்ன செய்து கொண்டிருந்தது? அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் தாங்கள் செலுத்திய கட்டண விவரங்களின் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தாலே போதுமே, கொட்டித் தீர்த்திருப்பார்களே! கல் வித் துறை ஏற்கெனவே இத்தகவல்கள் அனைத்தையும் பெற்று, ஒவ்வொரு பள்ளியையும் அதன் வசதிகளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்திருந்திருந்தால், இப்போது வெளிப்படையாக கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக அறிவிக்க வேண்டியதுதானே. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன, இவை எந்த அடிப்படையில் ஏ, பி, சி, என தரம் பிரிக்கப்பட்டன, இவற்றுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? சிறப்புக் கட்டணம் எவ்வளவு? என்பதை ஒட்டுமொத்தமாக இணையதளத்தில் வெளியிட்டால், பெற்றோர்கள் அனைவருமே பார்த்து அறிந்துகொள்ள முடியுமே! அரசு ஏன் இதில் இன்னமும் மெüனம் காக்க வேண்டும்.மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகம் ரூ. 445, யு.கே.ஜி. ரூ. 500, முதல் வகுப்பு ரூ. 655 என ஐந்தாம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறினாலும் இதை ஏன் மக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.1973-ல் இயற்றப்பட்ட தனியார் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 32-ன் படி, எந்த ஒரு தனியார் பள்ளியும் தகுதிவாய்ந்த அதிகாரி குறிப்பிட்டுள்ள கட்டணம் தவிர, வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக கல்வித் துறை அதிகாரிகள் ஏன் மெüனமாக இந்த கல்விக் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்?கல்லூரிகள் விவகாரத்திலும் இதே மெüனம்தான் நீடிக்கிறது. அதிகக் கட்டணம், நன்கொடை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து ஓராண்டு ஆகப் போகிறது. ஆனால் அந்தக் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது.சென்ற ஆண்டு பல பொறியியல் கல்லூரிகளில் அரசு அறிவித்த குழு நேரில் சென்று பல்வேறு புகார்களை விசாரித்தது. சில கல்லூரிகள் அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தின. ஆனால் எந்தப் பொறியியல் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள் தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு தகுதியானவையா இல்லையா? இன்னும் அறிவிப்பு இல்லை.ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு? முறைகேடு செய்த பொறியியல் கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை? கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இப்போது சொல்லாவிட்டால், வேறு எப்போது சொல்வார்கள்!
கட்டுகள்
கல்வி,
தினமணி தலையங்கம்,
பள்ளி
பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில்
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம்
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடலூர் மாவட்டம்,
சுற்றுலா,
பிச்சாவரம்
பிச்சாவரம் வன சுற்றுலா மையம்தங்கும் இடம் அதிகரிக்குமா அரசு?
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் வெளிநாட்டினர் தங்க, வசதியான இடம் இல்லாததால், அவர்களின் வருகை குறைகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.
காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர்
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.
பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்
கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)