கோரிக்கை பதிவு

100 தம்பதிகளுக்கு குழந்தையின்மை நல சிகிச்சை

கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இலவச மருத்துவ முகாமில், 100 தம்பதிகளுக்கு குழந்தையின்மை நல மருத்துவ  சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.  சென்னை பில்ராத் மருத்துவமனை மற்றும் பில்ராத் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடந்த இந்த முகாமில் குழந்தையில்லாத 100 தம்பதிகளுக்கு ரத்தப் பரிசோதனை விந்துப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் டி.தாட்சாயணி, சியாமளா, சிவாஜி ஆகியோர் ஆலோசனையும் சிகிச்சையும் அளித்தனர்.  முகாமை விழுப்புரம் சரக போலீஸ் துணை ஐ.ஜி. மாசானமுத்து தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு, கடலூர் ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகரன் தலைமை தாங்கினார்.திட்ட இயக்குநர் டாக்டர் வி.கே.கணபதி வரவேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக